2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரிக்கும் இஸ்லாமிய பயங்கரவாத வன்முறை

Freelancer   / 2022 மே 09 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில மாதங்களில் இஸ்லாமிய பயங்கரவாத வன்முறைக்கான புதிய மையமாக ஆபிரிக்கக் கண்டம் மாறிவருகிறது என்று கொள்கை ஆராய்ச்சி குழு என்ற சிந்தனையாளர் குழு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் 14 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2021 இல் அனைத்து   இஸ்லாமிய போராளிக் குழுக்களுடன் தொடர்புடைய தாக்குதல்களில் கால் பகுதி பொதுமக்கள் மீது நடத்தப்பட்டது என்று ஆப்பிரிக்காவின் இஸ்லாமிய போராளிக் குழுக்களால் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையின் பாதைகளை மதிப்பிடும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஹேல், சோமாலியா, ஏரி சாட் பேசின், வடக்கு மொசாம்பிக் மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக வன்முறைத் தாக்குதல்களுக்குப் பழகி வருகின்றனர் என, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் நிறுவனமான மூலோபாய ஆய்வுகளுக்கான ஆப்பிரிக்க மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.

2017 முதல் இஸ்லாமிய வன்முறையில் விரைவான அதிகரிப்பை சஹேல் பகுதி கண்டுள்ளதுடன், ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள பொதுமக்களைக் குறிவைத்து, நடத்தப்பட்ட வன்னுமுறைகளில் 60 சதவீதத்தை உள்ளடக்கிய மிக உயர்ந்த அளவிலான இஸ்லாமிய வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

சோமாலியாவில், அல் ஷதாப் என்ற பயங்கரவாதக் குழு, பதுங்கியிருந்து தாக்குதல்கள், சிக்கலான தாக்குதல்கள் மற்றும் போர்களில் ஈடுபட்டுள்ளது. 

அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து படுகொலைகளை மிரட்டுவதற்கான ஒரு கருவியாக நடத்துகின்றன என்று அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

2017-2019 ஆம் ஆண்களில் சோமாலியாவிலுள்ள பொதுமக்கள் மீது கிட்டத்தட்ட 900 நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்களை அல் ஷபாப் நடத்தியதுடன், கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்தனர்.

வன்முறை குழுக்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதன் மூலமும், போட்டியிடும் பகுதிகளில் பொதுமக்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலமும் பாதுகாப்புப் படைகளின் கடுமையான பதில்கள் பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் தீவிரமான விளைவை ஏற்படுத்துகின்றன என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X