Editorial / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது ஆயுதச் சோதனை இடைநிறுத்தத்தை வடகொரியா பேணும் வரையில் தான் மகிழ்ச்சியாக இருப்பேன் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.
தனது இறுதி அணுச் சோதனையான ஆறாவது சோதனையை, 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் வடகொரியா நிகழ்த்தியிருந்ததுடன், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையொன்றை இறுதியாக 2017ஆம் ஆண்டு நவம்பரில் நிகழ்த்தியிருந்தது.
இதேவேளை, வியட்நாம் தலைநகர் ஹனோயில், வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை, நாளையும் நாளை மறுதினமும், இரண்டாவது தடவை சந்திக்கும்போது, தலைவர் கிம்முடன் அணு ஒப்பந்தமொன்றை அடைய, தான் அவசரப்படமாட்டேன் என மேலும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
கொரிய வளைகுடாவில் முழுமையான அணுவாயுதமழிப்பை நோக்கி பணியாற்ற தமக்கிடையேயான முதலாவது சிங்கப்பூர் சந்திப்பில் ஜனாதிபதி ட்ரம்பும் தலைவர் கிம்மும் இணங்கியிருந்தபோதும் இந்த ஒப்பந்தமானது சில முடிவுகளையே தந்திருந்தது.
எந்த சலுகைகளையும் எதிர்பார்க்கும் முன், ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆபத்தை அளிக்கும் ஏவுகணைகள் உள்ளடங்கலான அணு ஆயுத திட்டத்தை கைவிடுமாறு வடகொரியாவை ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது. எவ்வாறாயினும், அண்மைய நாட்களில் பிடியைத் தளர்த்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், அணுவாயுதமழிப்பு குறித்து உருப்படியான முன்னநகர்விருந்தால், பொருளாதாரத் தடைகளை தன்னால் நீக்க முடியும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஹனோயில் ஜனாதிபதி ட்ரம்பும் தலைவர் கிம்மும் சந்திக்கும்போது 1950ஆம் ஆண்டு தொடக்கம் 1953ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற கொரிய யுத்தத்தை உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டு வர ஐக்கிய அமெரிக்காவும் வடகொரியாவும் இணங்கலாம் என தென்கொரியாவின் யொன்ஹப் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தலைவர் கிம்மின் ரயிலானது, மத்திய சீன நகரமானது வுஹானை, இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தாண்டிச் சென்றதாக யொன்ஹப் செய்தி முகவரகம் நேற்றுத் தெரிவித்த நிலையில், இன்று அதிகாலை வியட்நாமை தலைவர் கிம் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago