Editorial / 2019 மே 16 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவிலுள்ள எண்ணெய் நிலையங்கள் இரண்டை, ஆயுதந்தரித்த ட்ரோன்கள் நேற்று முன்தினம் தாக்கியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரக கடற்கரையோரத்துக்கு வெளியே சவூதி அரேபிய எண்ணெய்த் தாங்கிகள் நாசகாரத் தாக்குதலுக்கு இலாக்காகிய இரண்டு நாட்களிலேயே மேற்குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ட்ரோன் தாக்குதல்களின் மூலம் சவூதி அரேபியாவின் எண்ணெய் வளமிக்க கிழக்கு மாகாணத்திலிருந்து, செங்கடலிலுள்ள யன்பு துறைமுகத்துக்கான எண்ணெய்க் குழாயை விநியோகிக்கும் நிலையமொன்றில் சிறியளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் சக்தி அமைச்சர் காலிட் அல்-ஃபாலிஹ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக சவூதி அரச ஊடகமான சவூதி ஊடக முகவரகம் கூறியுள்ளது.
ஏற்பட்ட தீயானது பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், சவூதி அரேபியாவின் அரச எண்ணெய் நிறுவனமான அரம்கோ, எண்ணெய்க் குழாயூடாக எண்ணெய்யை விநியோகிப்பதை நிறுத்தியிருந்தது.
சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத்துக்கு 320 கிலோ மீற்றர் மேற்காகவுள்ள குறித்த எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து, எண்ணெய்ப் பீப்பாயொன்றின் விலை 1.2 சதவீதத்தால் உயர்ந்து 71 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டிருந்தது.
இந்நிலையில், சவூதி அரேபிய எண்ணெய் நிலையங்கள் மீது ஏழு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ஹூதிகளின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ தெரிவித்ததுடன், இதுவொரு வெற்றிகரமான நடவைட்டிகையொன்றெனவும், சவூதி அரேபியாவில் வசிப்போரின் உதவியைப் பெற்றுக்கொண்டதாகவும், மிகச்சிறந்த புலனாய்வை தாங்கள் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, இலக்குகளையோ அல்லது தாக்குதல் நடந்த நேரத்தையோ அடையாளங்காட்டாது சவூதி அரேபிய நிலையங்கள் மீது ஹீதிகள், ட்ரோன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக, ஹீதிகளால் நடாத்தப்படும் தொலைக்காட்சி தெரிவித்திருந்தது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago