2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ட்ராகன் (படங்கள்)

Ilango Bharathy   / 2022 ஜனவரி 12 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் சுமார் 180 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கடல் ட்ராகனின் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவிலுள்ள நார்த் லிசென்ஸ்டர்ஷுரே என்னும் பகுதியில் உள்ள ஒரு தீவின் ஏரியில் கடந்த வருடம் பெப்பரவரி மாதத்தில் ஜோ டேவிஸ் என்னும் ஆய்வாளர் வித்தியாசமான வடிவில் இருக்கும் புதைபடிவம், மண்ணில் புதைந்திருப்பதை கண்டறிந்தார்.

அதன்பிறகு, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது வித்தியாசமான உயிரினம் ஒன்றின் புதைப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஜோ டேவிஸ் தொல்லியல் துறையினருடன் சேர்ந்து, ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வந்தார்.

இவ்  ஆய்வின்  முடிவில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினம் இன்ஞ்ச்யோசரஸ் எனப்படும்  கடல் ட்ரர்கன் எனவும், அது சுமார் 180 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டிருக்கும் அதன் புதைப்படிவம் சுமார் 10 மீற்றர் நீளம் உடையது எனவும்  அதன் எடை சுமார் ஒரு தொன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .