Editorial / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரிய ஜனாதிபதித் தேர்தலின் ஆரம்ப உத்தியோகபூர்வ முடிவுகளில், அந்நாட்டின் ஜனாதிபதி முஹம்மது புஹாரி நேற்று முன்தினம் தொடக்கத்தில் முன்னிலை பெற்றுள்ளபோதும், ஜனாதிபதி புஹாரியின் பிரதான போட்டியாளரான அதிகூ அபுபக்கரின் கட்சி, குறித்த முடிவுகள் பிழையானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை என நிராகரித்துள்ளது.
சுயாதீன தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஆரம்ப முடிவுகளில், நைஜீரியாவின் 36 மாநிலங்களில் ஏழை, ஜனாதிபதி புஹாரி வென்றநிலையில், அவர் முன்னிலை பெற்றுள்ளார். அதிகூ அபுபக்கர், நான்கு மாநிலங்களிலும் தலைநகர் அபுஜாவிலும் வென்றுள்ளார். அபுஜா, மாநிலமில்லாதபோதும், தேர்தல்களில் தனி மாவட்டமொன்றாகக் கருதப்படுகிறது.
தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 51 சதவீதமான வாக்குகளை ஜனாதிபதி புஹாரி பெற்றுள்ள நிலையில், அதிகூ அபுபக்கர் 46 சதவீதமாக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாகாணத் தேர்தல் முடிவுகள், மாநிலங்களின் தலைநகர்களில் அறிவிக்கப்பட்டபோதும் அவை இன்னும் தேர்தல் ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்படவில்லை. அதில், நான்கு மாநிலங்களை ஜனாதிபதி புஹாரி வென்றுள்ளநிலையில், அதிகூ அபுபக்கர் ஒரு மாநிலத்தை வென்றுள்ளார்.
இவ்வாண்டுத் தேர்தல்களில் முக்கிய முனையொன்றாகக் கருதப்பட்ட வட மாநிலமான கனோவில், ஜனாதிபதி புஹாரியின் மாகாண முன்னிலையை நூற்றுக்கணக்கானோர் கொண்டாடியிருந்தனர்.
தேர்தலில் வெல்வதற்கு, வேட்பாளரொருவர் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறுவதுடன், நைஜீரியாவின் 36 மாநிலங்களிலும் அபுஜாவிலும் ஆகக்குறைந்தது 25 சதவீதமான ஆதரவை 2/3 இடங்களில் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேர்தல் வன்முறைகளுக்காக 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago