2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘இணையம் மூலம் ஆயுதங்களை வாங்கிய சந்தேகநபர்’

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள மசூதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரண்டன் டரான்ட், ஆயுதங்களையும் வெடிபொருட்களையும், இணையம் மூலம் கண் சிற்றியிலிருந்து வாங்கியதாக நேற்று (18) தெரிவித்த கண் சிற்றியின் உரிமையாளர் டேவிட் டிப்பிள், துப்பாக்கிப் பிரயோகத்தின்போது பயன்படுத்தப்பட்ட உயர்திறன் ஆயுதத்தை கண் சிற்றி விற்கவில்லை எனக் கூறியுள்ளார்.

நியூசிலாந்து துப்பாக்கிச் சட்டங்களின்படி, உயர்திறன் ஆயுதங்கள் அரைத்தன்னியக்கமாக இருக்கலாமென்றபோதும், அதன் மூலம் ஏழு சூட்டுக்களை நடத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பிரண்டன் டரான்டில் காணொளியில், மசூதியொன்றில் பல மகசீன்களைக் கொண்ட அரைத்தன்னியக்க துப்பாக்கியைக் கொண்டிருந்தார்.

2017ஆம் ஆண்டு டிசெம்பருக்கும் கடந்தாண்டு மார்ச்சுக்குமிலையில், நான்கு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பிரண்டன் ட்ரான்ட் வாங்கியதாக, கிறைஸ்சேர்ச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் டேவிட் டிப்பிள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இணையம் மூலமான கொள்வனவானது, பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்ட முறைமையத் தொடர்ந்தே இடம்பெற்றதாகவும் அரைத்தன்னியக்க ஆயுதங்கள், மூன்று அல்லது நான்கு கொள்வனவுகளில் பெற்றுக் கொள்ளப்பட்டதாக டேவிட் டிப்பிள் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதலைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையை நேற்றே முதன்முறையாகச் சந்தித்திருந்த நியூசிலாந்தின் பிரதமர் ஜசின்டா ஆர்டெனின் பிரதான விடயமாக, நியூசிலாந்தின் துப்பாக்கிச்சட்டங்களை இறுக்குவது காணப்பட்டிருந்தது.

ஐந்து மில்லியன் பேரைக் கொண்டிருக்கின்ற நியூசிலாந்து, 1.5 மில்லியன் துப்பாக்கிகளைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 16 வயதுடையவர் துப்பாக்கி அனுமதியைப் பெறலாம் என்பதோடு, 18 வயதுடையவர் அரைத் தன்னியக்க ஆயுதத்தைக் கொண்டிருக்கலாம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X