Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான அமைந்ததாக கூறிய ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது அவர்களுக்கு பேரிழப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீது அபராதமும் விதித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், உக்ரைனுக்கு மீதான போருக்கு இந்தியா உதவுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக ஆகஸ்ட் 7ஆம் மேலும் 25 சதவிகித வரியை அமெரிக்கா விதித்தது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. ட்ரம்பின் இந்த நடவடிக்கை காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி பல்வேறு பாதிப்புகளை சந்தித்தது. ஜவுளித்துறை, தோல், ரத்தினங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் போர் நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனாலும், ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாக ட்ரம்ப் கூறி இருந்தார்.
இதனிடையே பேச்சுவார்த்தைக்கு முன்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான சந்திப்பு உடன்பாடு எட்டப்படவில்லை என்றால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் புடின் உடனான சந்திப்புக்கு பின் ட்ரம்ப் கூறிய வார்த்தைகள் இந்தியாவுக்கு சற்று நிம்மதியை கொடுத்திருக்கிறது.
கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக டிரம்ப் பேசுகையில், ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் இருக்கின்றன. இந்தியா மட்டும் சுமார் 40 சதவிகித எண்ணெய் வாங்குகிறது. இந்த நாடுகளின் மீது இரண்டாம் கட்ட வரி விதிக்கப்பட்டால், அது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய இழப்புதான். ஆனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கப் போவது கிடையாது. ஒருவேளை அப்படி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், நிச்சயமாக செய்வேன். ஆனால் தற்போது அவ்வாறு வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். (a)
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago