Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானியப் படைகளால் பிடிக்கப்பட்ட இந்திய விமானி, இன்று (01) விடுவிக்கப்படுவாரென, பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்திலுள்ள நாடாளுமன்றத்தில், “சமாதான சமிக்ஞையொன்றாக அவரை நாளை (இன்று) விடுவிக்கிறோம்” என, பிரதமர் இம்ரான் கான், நேற்று (28) தெரிவித்தார்.
இதுதவிர, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, நேற்று முன்தினமிரவு அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும் அது வெற்றியளிக்கவில்லை என்றும், பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏவுகணைத் தாக்குதலொன்றை இந்தியா நடத்துமென நேற்று முன்தினமிரவு அஞ்சியதாகத் தெரிவித்த பிரதமர் இம்ரான் கான், பின்னர் நிலைமை சீரானதாகக் கூறியபோதும் அது தொடர்பில் மேலதிகமாகமெதுவும் தெரிவித்திருக்கவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானால் தமது விமானியொருவர் கைப்பற்றப்படும் சில காணொளிகளை நீக்குமாறு யூடியூப்பை இந்தியா வினவியுள்ளதாக, குறித்த விடயம் தொடர்பாக நேரடியாகப் பரிச்சயமான தகவல் மூலமொன்று, நேற்று (28) தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இந்திய அரசாங்கத்தின் உத்தரவின்படி ஏற்கெனவே யூடியூப் ஒழுகியுள்ளதாக, தன்னை வெளிப்படுத்த விரும்பாத குறித்த தகவல் மூலம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பொருத்தமானபோது அதிகாரிகளிடமிருந்தான, சட்டரீதியான வலிதான கோரிக்கைகளின்படி ஒழுகுவதாகவும் தங்களது நீண்டகாலக் காலக் கொள்கையின்படி விரைவாக செயற்ட்டு அவ்வாறனதை நீக்குவதாக யூடியூப்பின் பேச்சாளரொருவர், எந்தக் காணொளிகள் என குறிப்பாகத் தெரிவிக்காது கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மிரில், இம்மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலொன்று தொடர்பான கோப்பொன்றை இந்தியா கையளித்துள்ளதாக பாகிஸ்தானிய வெளியாட்டமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய துணைப்படைகளை இலக்குவைத்த குறித்த தாக்குதலில், துணைப் பொலிஸார் 40 பேர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்தே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே பதற்றம் அதிகரித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
38 minute ago
55 minute ago