2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இந்தியா - அமீரகம் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

Freelancer   / 2022 ஏப்ரல் 11 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான உறவுகள் இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் மூலம் பெரும் ஊக்கத்தை பெற்றுள்ளன.

இது இருதரப்பு எண்ணெய் அல்லாத வர்த்தகத்தை அடுத்த ஐந்து வருடங்களில் 100 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதியன்று கையெழுத்தானது. 

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் தற்போதைய 60 பில்லியன் டொலர் முதல் 100 பில்லியன் டொலர்கள் வரை ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளின் அனுமதிக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் மே 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரேபியன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தகம் முழு அளவிலான நிதிக்கான கதவுகளைத் திறக்கும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் தானி பின் அகமது பின் செயோதி, இந்திய ஊடகங்களுக்கு அளித்த இணையப் பேட்டியின் போது, ​​ கூறினார். 

இந்த வர்த்தகம் முழு அளவிலான நிதி, தொழில்நுட்பம் மற்றும் மனித மூலதன பரிமாற்றத்துக்கான கதவுகளைத் திறக்கும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X