2025 மே 12, திங்கட்கிழமை

இந்தியா-பாகிஸ்தான் போர் : ஜி7 நாடுகள் அவசர அறிக்கை

Freelancer   / 2025 மே 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், G7 நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையில் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தன.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தின.

பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான், இந்தியா இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. 

இது தொடர்பாக, ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X