Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 12 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசியான கோவக்சினை அங்கீகரிக்க ஜப்பான் தீர்மானித்துள்ளதாக ஜப்பானிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாரத் பயோடெக் மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட கோவக்சினை இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கான பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் 10ஆம் திகதி முதல் அங்கிகரிப்பதாக ஜப்பான் தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
2022 மார்ச் மற்றும் 2021 செப்டம்பரில் நடந்த குவாட் தலைவர்களின் உச்சி மாநாடுகளை பிரதமர் நரேந்திர மோடியும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குவாட்டின் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நிரலில், கோவிட் தடுப்பூசிகள், காலநிலை நடவடிக்கை, உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, இணைய பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கல்வி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உறுதியான விளைவுகளை வழங்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பித்தனர்.
எதிர்வரும் மாதங்களில் ஜப்பானில் நடைபெறவுள்ள குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டின் மூலம் குவாட் ஒத்துழைப்பை முன்னெடுப்பதை அவர்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாத இறுதியில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுத் திட்டங்களின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கூட்டாக செய்தி அறிக்கையை வெளியிட்ட இரு தலைவர்களும் வங்கதேசத்தில் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றத்தையும் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .