2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கடத்தும் தலிபான்கள்

Freelancer   / 2022 ஏப்ரல் 19 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானையோ அல்லது ஆயுதங்களையோ பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த தலிபான்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற அவர்களது கூற்றுக்கு மாறாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை கடத்தியதாக தலிபான்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது இறுதியில் இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய சண்டைகளில் பயன்படுத்தப்படலாம் என கனடாவை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவின் கருத்துக்கு அமைய, உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான சர்வதேச மன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்தாவிட்டால் பாகிஸ்தான் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும்  இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானில் செயல்படும் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்குபெரிய அளவில் கைகொடுக்கும் போது அது தான் முதலில் பாதிக்கப்படப் போகிறது என்றும் மன்றம் எச்சரித்தது.

ஆப்கானிஸ்தான் படைகளின் வசம் பெரும்பாலான இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா விட்டுச் சென்ற நிலையில், இறுதியாக அவை தலிபான்களின் வசமாகின.

காபூலைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அரசியல் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தப்பி ஓடிய ஆப்கானியப் படைகளால் விட்டுச் செல்லப்பட்ட அனைத்து அமெரிக்க தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் கட்டுப்பாட்டையும் பெற்றது.

இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் உள்ள ஆயுத சந்தைகள் அல்லது ஆயுத பஜாரில் விற்கப்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் இருந்து  பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் லொறிகளில் ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X