2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம்: சுனக் உறுதி

Freelancer   / 2022 டிசெம்பர் 03 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துடனான உறவுகளை மேம்படுத்துவதில் நாட்டின் பரந்த கவனத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு பிரித்தானியாவின் உறுதிப்பாட்டை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் பதவியேற்ற பின்னர் அவரது முதல் முக்கிய வெளியுறவுக் கொள்கை உரையை லண்டன் மேயரின் விருந்தில் ஆற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

தான் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், உலகெங்கிலும் உள்ள வணிகங்களில் முதலீடு செய்தாகவும் இந்தோ-பசிபிக் வாய்ப்புகள் கட்டாயம் என்றும் சுனக் கூறினார்.

பலரைப் போலவே, தனது தாத்தா பாட்டியும் கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் இந்திய துணைக் கண்டம் வழியாக ஐக்கிய இராச்சியத்துக்கு வந்து தங்கள் வாழ்க்கையை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.

சமீபத்திய ஆண்டுகளில், ஹொங்கொங், ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை நாங்கள் வரவேற்றுள்ளோம் எனவும் செயல்களால் ஜனநாயகத்தை தமது நாடு பாதுகாக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், ஐக்கிய இராச்சிய-சீன இருதரப்பு உறவுகளை விவரிக்க முந்தைய கன்சர்வேடிவ் கட்சி தலைமையிலான அரசாங்கம் பயன்படுத்திய முழக்கத்திலிருந்து தனது அரசாங்கத்தை விலக்கியதால், இங்கிலாந்தின் அணுகுமுறையை வளர்க்க விரும்புவதாக சுனக் கூறினார்.

சீனா ஒரு முறையான சவாலை முன்வைப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றும் தங்கள் மதிப்புகள் மற்றும் நலன்கள், இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் போது ஒரு சவால் மேலும் தீவிரமடைகிறது என்றும் அவர் எச்சரித்தார்.

உலக விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை தமது நாடு வெறுமனே புறக்கணிக்க முடியாது என்று ஒப்புக்கொண்ட அவர், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற மற்ற முன்னணி பொருளாதாரங்களையும் ஒப்புக்கொள்வதை சுட்டிக்காட்டினார்.

தனது பிரெக்சிட் சார்பு பார்வையை மீண்டும் வலியுறுத்திய சுனக்ஈ சட்டவிரோத இடம்பெயர்வு போன்ற பகிரப்பட்ட பிரச்சினைகளில் ஒத்துழைப்புக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய சட்டத்துடன் எந்த இணக்கத்தையும் நிராகரித்தார். 

இங்கிலாந்தின் வெளியுறவுக் கொள்கைக் கண்ணோட்டம் பற்றிய மேலதிக விவரங்கள் புதிய ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மதிப்பாய்வில் வெளியிடப்படும் என்று சுனக் உறுதிப்படுத்தினார்.
 
லண்டனின் நிதி மையத்தில் உள்ள கில்டாலில் உள்ள லார்ட் மேயர் விருந்து என்பது ஒரு வருடாந்த நிகழ்வாகும் என்பதுடன், அங்கு பிரித்தானிய பிரதமர், வணிகத் தலைவர்கள், சர்வதேச உயரதிகாரிகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் வெளியுறவுக் கொள்கையில் உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .