Editorial / 2026 ஜனவரி 17 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளாகி அது முழுவதும் தீப்பற்றி எரிந்து இருக்கலாம் என்றும் அதில் பயணித்த 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
15 minute ago
30 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
34 minute ago
44 minute ago