2025 மே 17, சனிக்கிழமை

இனிமேல் 30 நாட்கள் சம்பளத்துடன் திருமண விடுப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாகக்  குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகக்  குழந்தை பிறப்பு விகிதமானது தொடர்ந்து சரிவடைந்து கொண்டு செல்கின்றது.

குறிப்பாக  பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டு செல்வதால் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை அண்மைக் காலமாக  எடுத்து வருகின்றது.

குறிப்பாக அண்மையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்  திருமணமாகாதவர்களுக்கு சட்டப்பூர்வமாகக்  குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதோடு அவர்களுக்கெ சலுகைகள் மற்றும் மானியங்களும் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை வழங்குவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

 இவ் அறிவிப்பானது அந்நாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .