Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 09 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் நடவடிக்கை தொடர்பில் பிரதமர் இம்ரான் கானை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாக சாடியுள்ளது.
அரசாங்கத்தைத் தெரிவுசெய்யும் குடிமக்களின் உரிமையை பாகிஸ்தான் திறம்பட பறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பாகிஸ்தானை அரசியலமைப்பு நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது என்றும் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட கண்காணிப்பு அமைப்பு கண்டித்துள்ளது.
அதேவேளை, சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் இந்த நடவடிக்கைகள் நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கண்டித்துள்ளன.
அதிகாரத்தில் இருந்து தம்மை நீக்கக் கூடிய நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்குப் பதிலாக பாராளுமன்றத்தை கலைத்த இம்ரான் கானின் நடவடிக்கை, அரசாங்கத்தை தெரிவு செய்யும் குடிமக்களின் உரிமையை திறம்பட பறிக்கிறது என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டது.
பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர், அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று நிராகரித்த சில நிமிடங்களுக்குப் பின்னர் இம்ரான் கான் இந்த திட்டத்தை முன்வைத்தார்.
பாகிஸ்தான் ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இந்த முடிவை சபை நடவடிக்கைகளை நிர்வகிக்கும் அனைத்து விதிகளையும் மீறுவதாகக் கூறி விமர்சித்தனமை குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு உத்தரவுகள், தேசிய சட்டமன்றத்தின் விதிகளுக்கு மேலானவை என்று பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் உமர் அட்டா பண்டியல், பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது அறிவித்துள்ளதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .