Editorial / 2019 மார்ச் 14 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டுப் பிரதமர் தெரேசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) ஒப்பந்தத்தை இரண்டாவது தடவையாக, நேற்று முன்தினம் நிராகரித்துள்ளனர்.
அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இம்மாதம் 29ஆம் திகதி பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், குறித்த நிராகரிப்பானது, பிரித்தானியாவை மேலும் நிச்சயமற்றதன்மையொன்றுக்குள் தள்ளியுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் சர்ச்சைக்குரிய சரத்துகள் தொடர்பாக, மேலும் உறுதிமொழிகளை பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற்றிருந்தபோதும், அவரது ஒப்பந்தத்தை, 391-242 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றம் நிராகரித்திருந்தது.
அந்தவகையில், இவ்வாண்டு ஜனவரி 15ஆம் திகதி இடம்பெற்ற பிரெக்சிற் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் கிடைக்கப்பெற்ற 230 வாக்கு வித்தியாசத்திலான தோல்வியை விட பாரியளவு சிறியதாக குறித்த நிராகரிப்பு அமைந்திருக்கவில்லை.
இந்நிலையில், தனது ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த பிரதமர் தெரேசா மே, தாங்கள் பேரம்பேசிய ஒப்பந்தமே சிறந்தது எனவும் அதுவே ஒரே ஒப்பந்தம் எனவும் கூறியிருந்தார்.
இதேவேளை, கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்சிற் பேரம்பேசுநரான மைக்கல் பார்னியர், இதற்கு மேல் ஐரோப்பிய ஒன்றியம் எதையும் வழங்க முடியாதெனவும் மோசமான பிரெக்சிற்றை எதிர்பார்த்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரெக்சிற் தாமதமொன்றுக்கான வலிதான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர் கருத்திற் கொள்வார்கள் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜூன்-கிளாடியே ஜங்கரின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தமில்லாமல் பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஜேர்மனியின் வெளிநாட்டமைச்சர் ஹெய்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது அரசாங்கத்தின் உத்தி தோல்வியடைந்து விட்டது என்பதை பிரதமர் தெரேசா மே தற்போது ஒத்துக் கொள்ள வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவரான ஜெர்மி கோர்பைன் தெரிவித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்ட பிரெக்சிற்றை பேரம்பேசுமாறு கோரியுள்ளார்
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago