2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இராஜினாமா செய்தார் ஈரானின் வெளிநாட்டமைச்சர்

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் வெளிநாட்டமைச்சர் மொஹமட் ஜவாட் ஸரிஃப், எதிர்பாரதவிதமாக தனது இராஜினாமாவை இன்ஸ்டாகிராமில் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளுடனான ஈரானின் 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்த மொஹமட் ஜவாட் ஸரிஃப், தனது முடிவுக்கான குறிப்பிட்ட எந்தக் காரணங்களையும் தெரிவித்திருக்கவில்லை.

எவ்வாறெனினும், சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாட்டின், ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கான நேற்று முன்தின விஜயம் தொடர்பாகவே மொஹமட் ஜவாட் ஸரிஃப் இராஜினாமா செய்ததாக உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகள் இனம்காட்டுகின்றன. ஜனாதிபதி அசாட்டின் விஜயத்தின் எந்தவொரு நிகழ்விலும் மொஹமட் ஜவாட் ஸரிஃப் காணப்படாதநிலையில், இது குறித்து மொஹமட் ஜவாட் ஸரிஃப்புக்கு அறிவிக்கப்படவில்லை என ஒரு இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சிரிய யுத்தம் 2011ஆம் ஆண்டு ஆரம்பித்த பின்னர், முதற்தடவையாக ஈரானுக்கு பொது விஜயமொன்றை நேற்று முன்தினம் மேற்கொண்ட ஜனாதிபதி அசாட் ஈரானின் உயர் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி, ஈரானின் ஜனாதிபதி ஹஸன் றொஹானி ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்திருந்தார்.

அணு ஒப்பந்தத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா கடந்தாண்டு மேயில் விலகி, குறித்த ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்டிருந்த ஈரானின் பொருளாதாரம், எண்ணெய் மீதான தடைகளை மீண்டும் விதித்ததைத் தொடர்ந்து மேற்குலகுக்கெதிரான கடும்போக்குவாதிகளால் மொஹமட் ஜவாட் ஸரிஃப் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஈரானின் வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவரும் ஐக்கிய அமெரிக்காவுக்கான ஈரானின் தூதரகத்தின் பேச்சாளர் அலிரெஸா மிர்யூசெஃபியும் இராஜினாமா அறிவிப்பை உறுதிப்படுத்தியபோதும், இராஜினாமாவை ஜனாதிபதி றொஹானி ஏற்றுக் கொள்வாரா என உடனடியாகத் தெரியவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் 2013ஆம் ஆன்டு றொஹானி வென்றமையைத் தொடர்ந்து, வெளிநாட்டமைச்சராக மொஹமட் ஜவாட் ஸரிஃப் நியமிக்கப்பட்டிருந்தார்.

தனது 17ஆவது வயதிலிருந்து ஐக்கிய அமெரிக்காவில் மாணவரொருவராக, சான் பிரான்ஸிஸ்கோ, டென்வரில் வசித்திருந்த மொஹமட் ஜவாட் ஸரிஃப், பின்னர் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளில் இராஜதந்திரியொருவராகப் பணியாற்றியிருந்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X