Freelancer / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் இலங்கைக்குச் செல்லும் அமெரிக்கப் பிரஜைகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான தமது புதிய பயண ஆலோசனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியிலும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படலாம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தக்கூடும்.
ஆகையால் அமெரிக்கப் பிரஜைகள் எச்சரிக்கையாகச் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. R
9 hours ago
9 hours ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
10 Nov 2025