Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 26 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில், இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் அண்ணனுக்கு. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம், டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் மரியா பீபியை, கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே, மரியா பீபியை குடும்பத்தினர் சேர்ந்து தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனையடுத்து ஆணவக்கொலை செய்ததாக பொலிஸார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கின் விசாரணையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் இருவருக்கும் மரண தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
30 Apr 2025
30 Apr 2025