Freelancer / 2024 ஒக்டோபர் 10 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலில் பொதுமக்கள் மீது நேற்று நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய தீவிரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. (a)
9 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Mar 2026