Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கு 30 நாள்கள் கால அவகாசம் வழங்கியுள்ள அமெரிக்கா, அவ்வாறு இல்லையெனில் இஸ்ரேலுக்கான சில அமெரிக்க இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என, இஸ்ரேலுக்கு எழுத்துமூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (13) அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது,
வடக்கு காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவருவதாகவும் இந்த தாக்குதல் ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடந்த மாதம் வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதமான மனிதாபிமான இயக்கங்களை இஸ்ரேல் நிராகரித்தது அல்லது தடை செய்தது என்றும், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரி இது குறித்து கூறுகையில், “இஸ்ரேல் கடிதத்தை மறுஆய்வு செய்து வருகிறது, இந்த விடயத்தை தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். அமெரிக்க சாடியுள்ள குறலறச்சாட்டுகளை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம்” எனக் கூறினார்.
வடக்கில் ஹமாஸ் செயற்பாட்டாளர்களை குறிவைப்பதாகவும் மனிதாபிமான உதவிகளை நிறுத்தவில்லை என்றும் இஸ்ரேல் முன்னர் கூறியுள்ளது.
20 minute ago
25 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
41 minute ago