Freelancer / 2025 ஜூன் 30 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் வாரங்களில் வொஷிங்டன் செல்ல திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. எனவே இந்தப் பயணம் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்காக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இன்று, “காசாவில் ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள். பணயக்கைதிகளை திரும்பப் பெறுங்கள்.” என்று தனது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்துவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று, அடுத்த வாரத்திற்குள் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்று டொனால்டு ட்ரம்ப் கூறினார். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு ட்ரம்ப் பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். (a)
3 minute ago
6 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
13 minute ago