2025 மே 14, புதன்கிழமை

“இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும்”

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்லாமிய உலகம் ஒன்றிணைய வேண்டும்” என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி தெரிவித்துள்ளார். மேலும் “இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இஸ்ரேல் இன்று இதுபோல் காசாவில் குண்டுமழை பொழிந்திருக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கான சவுதி தூதர் அப்துல்லா பின் சவுத் அல் அனாஸியை வரவேற்றுப் பேசிய  ​போது ஜனாதிபதி இப்ரஹிம் ரைஸி, "ஒன்றிணைந்த முஸ்லிம் நாடுகளின் ஒருமித்த நிலைப்பாடு இன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில்  இருந்தும், அதன் மேற்கத்திய ஆதரவாளர்களிடமிருந்தும் அவர்களின் அடக்குமுறைகளிலும் முஸ்லிம்களைக் காப்பாற்றியிருக்கும். இனியாவது இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை ஓங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X