Editorial / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிய, வெளிநாட்டு தடுப்புக்கைதிகள் 280 பேரை, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள், ஈராக்கிடம் அண்மைய நாட்களில் கையளித்துள்ளதாக, அறிக்கையொன்றில் ஈராக்கிய இராணுவம் நேற்றுத் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பரிமாறப்பட்ட 150 பேருக்கு மேலதிகமாக, நேற்று முன்தினம் 130 பேர் பரிமாறப்பட்டதாக ஈராக்கிய இராணுவக் கேணலொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு பரிமாறப்பட்டவர்களில், ஈராக்கியலல்லாதவர்களும் பரிமாறப்பட்டுள்ளனர். இவ்வாறு நடைபெறுவது இதுவே முதற்தடவை என்ற நிலையில், அவர்கள் ஈராக்கின் தடுப்பில் தொடர்ந்திருப்பார்களான என்பது தெளிவில்லாமல் உள்ளது.
அந்தவகையில், சிரியாவில் சிரிய ஜன்நாயகப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 500 பேரை பரிமாறும் இணக்கத்தின் கீழ், இவ்வாறான பரிமாறல்கள் மேலும் இடம்பெறுமென ஈராக்கிய இராணுவ தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
பரிமாறப்பட்ட 280 பேரில், 14 பிரெஞ்சுப் பிரஜைகளும், பிரஜாவுரிமை வகைப்படுத்தப்படாத ஆறு அரேபியர்களும் உள்ளடங்குவதாக, சிரிய எல்லைக்கருகேயுள்ள படைகளைக் கட்டுப்படுத்தும் பரிமாற்ற நடவடிக்கைக்கு நெருங்கிய இராணுவத் தகவல்மூலமொன்று தெரிவித்துள்ளது.
ஈராக்கியப் பிரஜைகள் மாத்திரமே, சிரிய ஜனநாயகப் படைகளால் கையளிக்கப்பட்டதாக ஈராக்கிய இராணுவம் தெரிவிக்கின்ற நிலையில், சிரிய ஜனநாயகப் படைகள், ஐக்கிய அமெரிக்க ஆதரவுக் கூட்டணியின் பேச்சாளர்களின் கருத்துகளை உடனடியாகப் பெறமுடியவில்லை.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025