Shanmugan Murugavel / 2026 மார்ச் 07 , மு.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் கப்பல் லவனிலிருந்த மாலுமிகளுக்கு, கப்பல் அபாயத்திலுள்ளதாக சனிக்கிழமை (28) சமிக்ஞைஅனுப்பியதைத் தொடர்ந்து தாம் அடைக்கலமளித்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியால் டொர்பிடோ ஏவப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் கப்பல் டெனாவுடன் கடற்பயிற்சிகளில் கலந்து கொண்ட இக்கப்பலுக்கு உதவியதாக இந்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
கப்பல் தொழில்நுட்பப் பிரச்சினைகளை எதிர்கொண்டமையையடுத்து கொச்சிக்கு அவசரமாக வர கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அரசாங்க அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
கொச்சிக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை (01) அனுமதிக்கப்பட்டதாகவும், புதன்கிழமை (04) முதலில் கொச்சியில் கப்பல் நிற்கிறது.
கப்பலின் 183 மாலுமிகளுக்கு கொச்சியில் தங்குமிடங்களை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago