Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 18 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த வார்னிங்கை, ஈரான் கொஞ்சம் கூட மதிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இன்றிரவு அமெரிக்கா, நேரடியாக களத்தில் இறங்கலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
ஈரான் நேரப்படி, மாலை 5.30 மணியிலிருந்து இணைய சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சேதம் ஏற்பட்டு, அதனால் சேவை துண்டிக்கப்படவில்லை. மாறாக ஈரான் அரசே இணைய சேவையை துண்டித்திருக்கிறது.
இதனை நெட்ப்ளாக்ஸ் (NetBlocks) மற்றும் கென்டின் (Kentinc) போன்ற இணைய இணைப்பு கண்காணிப்பு நிறுவனங்கள் உறுதி செய்திருக்கின்றன.
இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால், வெளிநாட்டு இணையதளங்களை அணுகப் பயன்படுத்தப்படும் VPN (Virtual Private Network) சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற பிரபலமான சமூக ஊடகப் பயன்பாடுகளும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
இன்டெர்நெட் சேவையை முடக்கியதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, இஸ்ரேலின் சைபர் தாக்குதல்.
இரண்டாவது காரணம் அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தல். அதாவது இன்று இரவு அமெரிக்கா நேரடியாக தாக்குதுலை நடத்தக்கூடும் என்பதால் நெட்வொர்க் சேவை முடக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு முன்னர் காசாவில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர் அப்பகுதியில் இணைய சேவையை துண்டித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. R
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago