2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஈரான் தடையில் இந்தியாவுக்கு மேலும் விதிவிலக்கு

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை, கடந்த திங்கட்கிழமை (05) முதல், ஐக்கிய அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள போதிலும், இந்தியாவுக்கான மேலுமொரு விதிவிலக்கை வழங்கியுள்ளது.

ஈரானின் எண்ணெய், நிதித் துறை உள்ளிட்ட பிரதான துறைகளை இலக்குவைத்தே இத்தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள், ஈரானின் எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலதிக விதிவிலக்காக, ஈரானில் துறைமுகமொன்றை விருத்தி செய்வதற்கான திட்டத்துக்கும், தடைகள் விதிக்கப்படாது என, ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ அறிவித்துள்ளார். இத்திட்டம், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை முன்னேற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஈரானின் எண்ணெயை, ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் இறக்குமதி செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான வளர்ச்சிக்கும் அந்நாட்டுக்கான மனிதாபிமான உதவிகளுக்காகவும், இந்த ஏற்பாடுகள் அவசியமானவை என, ஐ.அமெரிக்கா தெரிவிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X