2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உக்ரேனுடன் கைகோர்த்த சூப்பர் ஹீரோக்கள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 29 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனின் கீவ், கார்கிவ், மரியுபோல் நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள், தொடர்ந்து ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஆங்காங்கே குண்டுகள் வீசப்படுவதால் சுரங்கப்பாதைகளிலும், பதுங்குக் குழிகளிலும் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் போரினால் துவண்டு போயுள்ள உக்ரேனிய சிறுவர்களுக்கு  ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப்படங்களில்  வரும் ”சூப்பர் ஹீரோஸ்” என அழைக்கப்படும் பிரபல கதாபாத்திரங்களின் உடைகளை அணிந்து வந்த இளைஞர்கள் சிலர், சிறுவர்களுடன்  விளையாடி அவர்களை உற்சாகப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X