2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உக்ரைனில் அதிகரிக்கும் சீனாவின் புவிசார் அரசியல் முயற்சி

Freelancer   / 2022 ஜனவரி 12 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனில் சீனாவின் பன்முகத் தன்மை கொண்ட ஆர்வம், அதன் மூலோபாய புவியியல் இருப்பிடம், உயர்நிலை சோவியத் பாதுகாப்பு அமைப்புகளின் தொழில்நுட்பம் ஆகியவை பீஜிங்கின் செல்வாக்கை கீயேவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

சீனாவை ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுடன் இணைப்பதற்கு அதன் பட்டுப்பாதை முன்னெடுப்பில், உக்ரைனை ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாக பீஜிங் கருதுகிறது என்று ஜியோபொலிட்டிக்கா இன்போவின் பத்தியாளரான டி வலரியோ ஃபப்ரி தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய பொதுமக்களால் நடத்தப்பட்ட சீனாவுக்கு எதிரான போராட்டங்களின் உதவியுடன், சீன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மூலம் உக்ரைன்-சீன உறவுகள் சமீப காலங்களில் தலைகீழாகியுள்ளன.

2016ஆம் ஆண்டு உக்ரேனிய விமான நிறுவனமான மோட்டர் ஷிக்கின் பெரும்பாலான பங்குகளை சீனாவின் விமான நிறுவனமொன்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம்  இரகசியமாக வாங்க முயன்றபோது பிரச்சினைகள் ஆரம்பமானதுடன், பின்னர் அவை 2017 இல் உக்ரேனிய அதிகாரிகளால் இரத்து செய்யப்பட்டன.

மேலும், உக்ரைனில் பீஜிங்கின் தடுப்பூசி இராஜதந்திரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் விநியோகம் இருந்தபோதிலும் அவை மந்தமான விவகாரமாக இருந்தன.

சீனாவின் சந்தேகத்துக்குரிய நோக்கங்கள் மற்றும் விரிவாக்க மனப்பான்மை தொடர்பில் உக்ரேனிய சமூகத்தின் ஒரு பகுதியினருக்குள் சீனா மீதான பொதுவான அவநம்பிக்கை மற்றும் சீனாவுக்கு எதிரான உணர்வுகள் அதிகமாக இருப்பதால், சீனக் கொள்கை வகுப்பாளர்களுக்கு இது ஒரு முக்கிய கவலையாக உள்ளது என்று ஃபப்ரி கூறியுள்ளார்.

உக்ரைனில் சீனாவின் பொருளாதார விரிவாக்க முயற்சிகளுக்கு எதிராகவும் சீனாவின் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிராகவும் கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி, கியேவில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே பல்வேறு தேசபக்தி அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் கொண்ட குழு நடத்திய போராட்டம், சீனா மீதான அவநம்பிக்கையின் சமீபத்திய உதாரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தாய்வானுக்கு எதிரான சீனாவின் கொள்கைகளைக் கருத்திற் கொண்டு உக்ரைனில் தாய்வான் பிரதிநிதி அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

எதுஎவ்வாறாயினும், லிதுவேனியாவில் தாய்வான் பிரதிநிதி அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்ட பின்னர், சீன அரசாங்கம் நடத்தும் ஆங்கில மொழி ஊடகமான குளோபல் டைம்ஸ், சீனாவின் இறையாண்மைக்கு சவால் விடும் அதன் நடவடிக்கைகளுக்கு லிதுவேனியா விலை கொடுக்கும் என்று எச்சரிக்கும் கட்டுரைகளை வெளியிட்டமையையும் ஃபப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X