2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்

Freelancer   / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காயமடைந்தவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு உதவ அனைத்து அவசர சேவைகளும் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு வந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப அறிக்கைகளின்படி, ரயில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் தாக்குதல் நடந்த இடத்திலிருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X