2026 மே 14, வியாழக்கிழமை

dd

உணவில் இருந்து எட்டிப் பார்த்த கண்களால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 04 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் ஒருவர் உட்கொண்ட உணவில் எலியின் கண்கள் இருந்த சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

ஜுயன் ஜோஸ்(Juan Jose) என அழைக்கப்படும் குறித்த இளைஞர் தான் சமைத்த உணவை உண்ணும் போது உணவில் கறுப்பு நிறத்தில் ஏதோ இருப்பதைப் பார்த்துள்ளார். எனினும் அதனைப் பெரிதாகப் பொருட்படுது்தாமல் அவ்வுணவை உண்டுள்ளார்.

இதன் போது தான் ஏதோ வித்தியாசமான பொருளை உண்பதாக அவர் உணர்ந்திருக்கிறார். அதன்பிறகு தட்டில் கண்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அதனை பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் காண்பித்த போது, அது இறந்த எலியின் கண்கள் என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகளோடு குறித்த எலி இறந்த  நிலையில் இருந்திருக்கக் கூடும் எனவும் அதனைப் ஒழுங்காகப் பார்க்காமல்  சமைத்து விட்டதாகவும் இது குறித்து  அக்கடை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது உணவில் எலியின் கண்கள் இருக்கும் புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர்  வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .