2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உய்குர்களை வெள்ளையடிக்க பதிவர்களை பட்டியலிடும் சீனா

Freelancer   / 2022 மே 07 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்ஜியாங்கில் உய்குர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சீனா சில புதிய முகங்களைப் பட்டியலிட்டுள்ளது.

தொலைதூர மேற்கு பிராந்தியத்தில் மகிழ்ச்சியான சிறுபான்மையினரைக் காட்டும் குறுகிய வீடியோக்களை உருவாக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த இளம் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களையே சீனா பணிக்கமர்த்தியுள்ளது.

வீடியோ பதிவர்களால் பதிவுசெய்யப்பட்ட பயண வீடியோக்கள், சீனாவில் தடைசெய்யப்பட்ட டுவிட்டர் போன்ற தளங்களில் பகிரப்படுவதுடன், அரச ஊடகங்கள் மற்றும் தொடர்புடைய தளங்களால் பரப்பப்படுகின்றன.

உய்குர்களை சீன ஆட்சியுடன் உள்ளடக்கியவர்களாகவும் நன்றியுள்ளவர்களாகவும் சித்தரிக்க பீஜிங்கின் பாரிய பிரச்சார முயற்சியின் எதிரொலி பெருகியுள்ளது. 

"நண்பர்களே, உய்குர் இனப்படுகொலை நடப்பது பொய்" போன்ற தலைப்புகளுடன், வெளிநாட்டுப் பயணிகள் சின்ஜியாங்கில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளவர்களை நேர்காணல் செய்வதை வீடியோக்கள் காட்டுகின்றன. 

"இங்கே எல்லாம் சாதாரணமாக உள்ளது" மற்றும் "1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வதை முகாம்களில் உள்ளனர் என்பதற்கு ஒரு ஆதாரம் உள்ளதா?" போன்றவையும் வீடியோக்களில் வெளிப்படுத்துகின்றன.

அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை ஏற்பாடு செய்கின்றன.

இது தொடர்பில்  நன்கு அறிந்த ஆவண மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் வெளியிட்ட ஆவணங்களின்படி, பயணங்களை மேற்கொள்ள வீடியோ பதிவர்களுக்கு பணம் செலுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊடகம் அல்லது சீன அரசாங்கத்தால் நடத்தப்படும் எந்தவொரு நிறுவனங்களும், 
வீடியோ உருவாக்குபவருடன் தொடர்பு கொண்டு, விமானங்கள் மற்றும் தங்குமிடங்களுக்கு பணம் செலுத்தி பயணத்தை ஒழுங்கமைத்து தருவதாகக் கூறி இந்தப் பயணங்களுக்குச் செல்ல அவர்களை அழைப்பர் என்று, ஷென்ஷெனில் 14 ஆண்டுகள் வாழ்ந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் வின்ஸ்டன் ஸ்டெர்செல் கூறினார்.
 
மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது திருத்துபவர்களாக பணிபுரியும் மைண்டர்கள், வீடியோ உருவாக்குபவர்கள் ஸ்கிரிப்டைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய எப்போதும் உடன் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தங்கள் தனிப்பட்ட வலைத்தளங்கள் அல்லது யூடியூப் போன்ற தளங்களில் சமூக ஊடக கணக்குகளில் குறுகிய வீடியோக்களை இடுகையிடும் வீடியோ பதிவர்கள், தங்களது பயணங்களை ஏற்பாடு செய்து பயணங்களின் போது அவர்கள் சீனாவை ஒரு நல்ல வெளிச்சத்தில் வைக்கும் வீடியோக்களை உருவாக்குவதற்காக  உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் யூடியூபர் லீ பாரெட் அவர் பதிவு செய்த வீடியோவில் கூறினார்.

சீன கலாச்சாரம், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நேர்மறையான இராஜதந்திர உறவுகள் மற்றும் தூதரகம் பற்றிய பொதுச் செய்திகளை தங்களது பார்வையாளர்களுக்கான உள்ளடத்தில் உருவாக்குமாறு சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .