2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

உலகின் கடைசி நகரம் எங்கே உள்ளது தெரியுமா?

S.Renuka   / 2025 ஜூலை 09 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் கடைசி நகரம் என்று அழைக்கப்படும் பகுதி பனி சூழ்ந்த அண்டார்டிகா கண்டத்தின் அருகே அமைந்துள்ளது.

அந்த நகரும் குறித்த சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.

உலகில் மனிதர்கள் வாழ முடியாத அசாதாரணமான சூழல் நிலவும் பகுதியாக அண்டார்டிகா பகுதி உள்ளது. இங்கு ஆய்வுக்காக மட்டுமே அறிவியலாளர்கள் ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளனர்.

அவர்களை தவிர்த்து சொற்பமானவர்களே அண்டார்டிகா பகுதியில் உள்ளனர்.

இந்த பகுதிக்கு அருகே உள்ள நகரம்தான் உலகின் கடைசி நகரமாக கருதப்படுகிறது.

இங்கு நாம் குறிப்பிடுவது தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரைத்தான்.

இது தியெரா டெல் பியூகோ மாகாணத்தின் தலைநகராக உள்ளது.

இங்கு மொத்தமே 83 ஆயிரம்பேர்தான் வசிக்கின்றனர்.

கடலையொட்டி அமைந்துள்ள இந்த நகரம் மற்ற பகுதிகளில் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

இங்கிருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் அண்டார்டிகா பனி பிரதேசம் அமைந்துள்ளது.

இந்த நகருடன்தான் தென் அமெரிக்கா கண்டமும் நிறைவடைகிறது.

உலகின் தெற்கு விளிம்பில் உஷுவாயா நகரம் உள்ளதால் இதனை உலகின் கடைசி நகரம் என்று அழைக்கிறார்கள்.

இங்கு ஸ்பானிஷ் தான் அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது.

இருப்பினும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் ஆங்கிலும் அதிக அளவில் பேசப்படுகிறது.

இந்த நகரில் தேசிய பூங்காக்கள் அழகா அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது துறைமுக நகரமாக செயல்படுகிறது.

இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான கப்பல்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X