2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

உலகின் செல்வ செழிப்புமிக்க அமீரக குடும்பம்

Mithuna   / 2024 ஜனவரி 21 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி அல் நஹ்யான் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது.

எம்பிஇசட் என்று அழைக்கப்படும் சேக் முகம்மது பின் செய்யத்அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என இவரது குடும்பம் மிகப் பெரியது. அவரது குடும்பம் வசிக்கும் மாளிகையின் மதிப்பு ரூ.4,078 கோடி ஆகும். 700 சொகுசு கார்கள் 8 ஜெட் விமானங்கள் இக்குடும்பத்தினர் வசம் உள்ளது.

உலகின் மொத்த எண்ணெய் வளத்தில், நஹ்யான் குடும்பத்தின் வசம் மட்டும் 6 சதவீதம் உள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் இக்குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளனர். பாடகி ரிஹானாவின் அழகு சாதன நிறுவனமான ஃபென்டி முதல் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரையில் இக்குடும்பத்தினர் பலதரப்பட்ட தளங்களில் முதலீடு மேற்கொண்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள கஸ்ர் அல்-வதன் மாளிகையில் நஹ்யான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 94 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை அமைந்துள்ளது. ரூ.4,078 கோடி மதிப்பிலான இந்த மாளிகையில் சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என 56 பேர் வசிக்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகம் தவிர்த்து, பாரீஸ், லண்டன் என உலகின் முக்கிய நகரங்களில் பெரும் சொத்துகளை இக்குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். பிரிட்டனின் பிரபலமான கால்பந்தாட்ட குழுவான மான்செஸ்டர் சிட்டியை ரூ.2,122 கோடிக்கு அல் நஹ்யான் குடும்பம் 2008-ம் ஆண்டு வாங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X