Ilango Bharathy / 2022 நவம்பர் 08 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் 2022ஆம் ஆண்டுக்கான உலகின் தலைச் சிறந்த சீஸைத் தெரிவு செய்யும் போட்டியொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
இப்போட்டியில் 42 நாடுகளில் இருந்து 900 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 4434 சீஸ்கள் இடம்பெற்றிருந்தன.
அத்துடன் நடுவர்கள் குழுவில், பிரபல சீஸ் தயாரிப்பாளர்கள், சமையல் கலை நிபுணர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இணைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இப் போட்டியில் ‘ Le Gruyère AOP surchoix ‘என்ற சீஸ் உலகின் தலை சிறந்த சீஸாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சீஸானது நாக்கில் வைத்தவுடனேயே உருகுவது இதன் சிறப்பம்சமாகக் கூறப்படுகின்றது,
ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வோர்டர்ஃபுல்டிஜென் மற்றும் சுத்திகரிப்பாளர் கோர்மினோ நிறுவனத்தை சேர்ந்த இச் சீஸ், பதனிடப்படாத (raw) மாட்டு பாலை கொண்டு தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதன் மென்மையான மற்றும் சற்று மொறுமொறுப்பான( crumbly) பதம் நடுவர்கள் மனதை வென்றதாகக் கூறப்படுகிறது.
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago