2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உளவுப் பணிகளில் நடிகைகள்;வெளியான திடுக்கிடும் தகவல்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 04 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

‘பாகிஸ்தானில் உளவுப் பணிகளில் நடிகைகள் ஈடுபடுத்தப்படுவதாக‘ அந்நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் அடில் ராஜா தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரான அவர், பிரித்தானியாவில் உள்ள அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார்.

அதேசமயம் அண்மைக்காலமாக ‘இராணுவ வீரர் பேசுகிறார்‘ என்ற யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனை சுமார் 2.9 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில் குறித்த யுடியூப் சேனலில்   அண்மையில்”நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகள் பாகிஸ்தானிய நடிகைகளை உளவுப் பணிகளில் ஈடுபடுத்தி வருவதாகத்” தெரிவித்திருந்தார்.

இவ்வீடியோவானது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து ”பாகிஸ்தானின்  உளவு அமைப்பு, தயாரித்து வெளியிட்ட நாடகங்களில் பணியாற்றியவர்களை குறிப்பிட்டு, அவர்களே அடில் கூறியுள்ள நடிகைகள் என அந்நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

 கடந்த காலங்களில், உயர் பதவியில் இருந்த இந்தியர்களை காதல் என்ற பெயரில் பயன்படுத்தி அவர்களிடம் இருந்து இராணுவ உளவு தகவல்களை, பாகிஸ்தானைச் சேர்ந்த சில பெண்கள் பெற்ற செய்திகள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .