Editorial / 2019 மார்ச் 01 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுவேலா மத்திய வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களிலிருந்து, ஆகக்குறைந்தது எட்டு தொன்கள் தங்கம், கடந்த வாரம் அகற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரொருவரான ஏஞ்சல் அல்வாரடோவும் அரசாங்கத் தகவல் மூலங்கள் மூன்றும் தெரிவித்துள்ளன.
மத்திய வங்கியில் வழமையான பாதுகாப்புக் காவலர்கள் இல்லாதபோது, கடந்த வாரம் புதன்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்குமிடையில் அரசாங்க வாகனங்களில் தங்கம் அகற்றப்பட்டதாக ஏஞ்சல் அல்வாரடோவும் அரசாங்கத் தகவல் மூலங்களும் தெரிவித்துள்ளன.
“இதை சட்டரீதியற்ற முறையில் வெளிநாட்டில் விற்க அவர்கள் திட்டமிடுகின்றனர்” என நேர்காணலொன்றில் ஏஞ்சல் அல்வாரடோ தெரிவித்துள்ள நிலையில், கருத்தைப் பெறுவதற்காக மத்திய வங்கியை அணுகியபோது அது பதிலளித்திருக்கவில்லை.
இந்நிலையில், ஏஞ்சல் அல்வாரடோவும் தங்களை வெளிப்படுத்தாமல் கருத்துத் தெரிவித்த தகவல் மூலங்களும், தங்கத்தை எங்கு மத்திய வங்கி அனுப்புகின்றது எனத் தெரிவித்திருக்கவில்லை. மத்திய வங்கியின் தலைவர் கலிக்ஸ்டோ ஒர்டேகா வெளிநாட்டுப் பயணமொன்றில் இருக்கும்போதே, குறித்த நடவடிக்கை இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டில், வெனிசுவேலாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு, 23 தொன்கள் தோண்டப்பட்ட தங்கங்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக, தகவல் மூலங்களும் துருக்கிய அரசாங்கத் தரவுகளும் வெளிப்படுத்துகின்றன.
இந்நிலையில், வெனிசுவேலாவின் தெற்கிலுள்ள தங்கச் சுரங்க முகாம்களிலிருந்து, மேற்கூறப்பட்ட தங்கத்தின் பகுதியொன்றை வாங்கிய மத்திய வங்கி, அடிப்படை உணவுகளை கொள்வனவு செய்வதற்கான நிதிக்காக, துருக்கிக்குக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக, வியாபாரம் தொடர்பாக அறிந்த 30க்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மத்திய வங்கியின் தரவுப்படி, மத்திய வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களிலிருந்து 20 தொன்கள் செலாவணித் தங்க இருப்பும் அகற்றப்பட்ட நிலையில், 140 தொன்களே காணப்படுகின்ற நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் காணப்படும் குறைவான இருப்பாகும்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago