Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 23 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து போப் லியோ கூறியதாக வத்திக்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மத்திய கிழக்கில் இருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முன் எப்போதையும் விட, மனிதகுலம் அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பொறுப்புணர்வும் பகுத்தறிவும் தேவைப்படும் ஒரு கூக்குரல். மேலும் இது ஆயுதங்களின் இரைச்சல் அல்லது மோதலைத் தூண்டும் சொற்பொழிவுகளால் மூழ்கடிக்கப்படக் கூடாது.
போதுமான மனிதாபிமான உதவிக்கான தேவை இன்னும் அவசரமாகி வரும் நிலையில், குறிப்பாக காசா மற்றும் பிற பிரதேசங்களில் மக்களின் அன்றாட துன்பங்கள் மறக்கப்படும் அபாயம் உள்ளது. சர்வதேச சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் போரின் துயரத்தை தடுக்கும் தார்மிகப் பொறுப்பைக் கொண்டுள்ளனர். மனித கண்ணியம் ஆபத்தில் இருக்கும்போது அதைவிட பெரிய பிரச்சினை எதுவும் இருக்க முடியாது.
போர் மூலம் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. மாறாக, அது அவற்றைப் பெரிதாக்கி மக்களின் வரலாற்றில் ஆழமான காயங்களை ஏற்படுத்துகிறது. எந்த ராணுவ வெற்றியும் ஒரு தாயின் வலியையோ, ஒரு குழந்தையின் பயத்தையோ அல்லது திருடப்பட்ட எதிர்காலத்தையோ ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. வன்முறை மற்றும் ரத்த மோதல்கள் மூலம் அல்லாமல், அமைதிப் மூலம் நாடுகள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கட்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
40 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago