Editorial / 2019 மார்ச் 04 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய விமானப்படை விமானியை, எந்தவொரு வெளி அழுத்தம் அல்லது கட்டாயத்தில் விடுவிக்கவில்லை என பாகிஸ்தானிய வெளிநாட்டமைச்சர் ஷா மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட காஷ்மிரில், குறித்த விமானியின் ஜெட் வீழ்ந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானியப் படைகளால் கைப்பற்றப்பட்ட விமானி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இன்னும் மிகவும் பதற்றமான நிலையிலேயே இருப்பதாக ஷா மெஹ்மூட் குரேஷி மேலும் தெரிவித்துள்ளதுடன்இ கடந்த மாதம் 14ஆம் திகதி புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ஜைஷ்-ஈ-மொஹமட் குழுவின் வகிபாகம் குறித்தும் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தாங்கள்இ ஜைஷ்-ஈ-மொஹமட் குழுவின் தலைமையை தொடர்புகொண்டபோதுஇ அவர்கள் தாக்குதலை மறுத்ததாக ஷா மெஹ்மூட் குரேஷி கூறியுள்ளார்.
இதேவேளைஇ இந்தியஇ பாகிஸ்தான் இராணுவங்களால் மேற்கொள்ளப்பட்ட கடும் தாக்குதல்களால்இ காஷ்மிரின் இரண்டு எல்லைப் பகுதிகளிலும் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிய பகுதியில்இ இரண்டு பொதுமக்களும் இரண்டு படைவீரர்களும் கொல்லப்பட்டதாக அந்தாட்டு இராணுவம் தெரிவித்துள்ள நிலையில்இ இந்தியப் பகுதியில்இ வீடொன்றை மோட்டார் ஷெல் தாக்கியதில்இ பெண்ணொருவரும் அவரின் இரண்டு பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளைஇ ஜம்மு காஷ்மிரின் குப்வரா மாவட்டத்தில் 56 மணித்தியாலங்களாக இடம்பெற்ற மோதலில்இ இரண்டு ஆயுததாரிகளும் ஐந்து பாதுகாப்புப் படையினரும் பொதுமகனொருவரும் கொல்லப்பட்டதாகஇ இந்தியப் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்இ வர்த்தக விமாங்களுக்காக தனது வான்பரப்பை கட்டுப்படுத்திய வண்ணமே பாகிஸ்தான் தொடர்ந்தும் காணப்படுகிறது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago