Freelancer / 2024 நவம்பர் 04 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவில் உள்ள எரிமலை, ஞாயிற்றுக்கிழமை (3) இரவு, திடீரென வெடித்து சிதறியது.
இதனால், அப்பகுதியில் உள்ள கிராமங்களை எரிமலையில் இருந்து வெளிவந்த கரும்புகை சூழ்ந்தது. அதேபோல், எரிமலையில் இருந்து தீக்குழம்பும் வெளிவந்தது.
இந்நிலையில், எரிமலை வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர். அதேவேளை, எரிமலை தொடர் சீற்றத்துடன் காணப்படுவதால், மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
31 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago