Freelancer / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர விவசாயிகள் 48 மணி நேரத்துக்குள் அறுவடை செய்ய வேண்டும் என்று, எல்லை பாதுகாப்புப் படையான பிஎஸ்எஃப், திங்கட்கிழமை (28) அறிவுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இங்கு பாதுகாப்பை அதிகரிக்க பிஎஸ்எஃப் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
அறுவடைக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
530 கிலோமீற்றர் நீளமுள்ள சர்வதேச எல்லையில் 45,000 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக அமிர்தசரஸ், டர்ன் தரன், ஃபெரோஸ்பூர் மற்றும் பைசலாபாத் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அறுவடையை முடிக்கும்படி குருத்வாராக்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோதுமை அறுவடையில் 80% க்கும் அதிகமானவை நிறைவடைந்திருந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவடை செய்து, பின்னர் தீவனமாகப் பயன்படுத்த வைக்கோலை சேகரிப்பது மிகவும் சவாலானது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
20 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
40 minute ago