2025 மே 17, சனிக்கிழமை

ஏமன் படகு விபத்தில் 21 பேர் பலி

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொடைடா துறைமுக நகர பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருமண நிகழ்வொன்றுக்கு 27 பேர் சென்றிருந்த நிலையில், திடீரென படகு நீரில் மூழ்கியதால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பெண்கள், 7 சிறுவர்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர்.

குறித்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .