Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 06 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் இசைப் பாடகரான `டுபக் அமரு ஷகுர்` (Tupac Amaru Shakur) எழுதிய கடிதங்கள் அண்மையில் ஏழத்தில் விடப்பட்டன.
அமெரிக்காவின் நியூரோர்க் நகரில் 1971 ஆம் ஆண்டு பிறந்த டுபக் அமரு ஷகுர், தனது இளமைக்காலத்தில் கவிதை மற்றும் கடிதங்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது .
அத்துடன் ராப் இசையிலும் கொடிகட்டிப் பறந்த அவர் எதிர்பாராத விதமாக 1996 ஆம் ஆண்டு, தனது 25ஆவது வயதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார்.
இந்நிலையில் அவர் தனது இளம் வயதில் எழுதிய கடிதங்களை லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிறுவனமொன்று அண்மையில் ஏலத்திற்கு விட்டது.
அதில் டுபெக் எழுதிய காதல் கடிதங்களும் இந்த ஏலத்தில் விற்பனைக்கு வந்தன. இவை கோசிமா என்ற பெண்ணிடம் இருந்து பெறப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக அவற்றுள் பிரபல ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்-ற்கு டுபெக் எழுதிய கடிதங்களும் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அவர் எழுதிய காதல் கடிதம் ஒன்று 35,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைலாகி வருகின்றன .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .