Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான, வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் கடந்தாண்டு இடம்பெற்ற முதலாவது சந்திப்பில் அகற்றுவதாகத் தெரிவித்து அகற்ற ஆரம்பித்த, டொங்சங்-றியிலுள்ள சொஹயே செய்மதி ஏவுகணை நிலையத்தின் பகுதியொன்றை வடகொரியா மீள அமைத்துள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில், தலைவர் கிம்மை, ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வாரம் சந்தித்துக்கொண்டபோதும் குறித்த நிலையத்தில் பணிகள் இடம்பெற்றதாக தென்கொரியாவின் யொன்ஹப் செய்தி முகவரகமும் ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வடகொரிய நிலையங்கள் இரண்டும் தெரிவித்துள்ளன.
வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட வடகொரியத் திட்டமான 38 நோர்த்தால் பார்வையிடப்பட்ட செய்மதிப் புகைப்படங்களின்படி, குறித்த நிலையத்தின் ஏவுதளத்திலுள்ள கட்டமைப்புகள், கடந்த மாதம் 16ஆம் திகதிக்கும் இம்மாதம் இரண்டாம் திகதிக்குமிடையில் மீளக் கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறித்த திட்டத்தின் பணிப்பாசிரியர் ஜெனி டெளண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்ட உத்திநோக்கு, சர்வதேசக் கற்கைகளுக்கான நிலையம், செய்மதிப் புகைப்படங்களை மேற்கோள்காட்டி, குறித்த நிலையத்தை வேகமாக மீளக்கட்டமைக்க வடகொரியா முயல்வதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இது குறித்து கருத்துத் தெரிவிக்க வெள்ளை மாளிகையை அணுகியபோது, அது, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை நோக்கி கையைக் காண்பித்திருந்த நிலையில், இராஜாங்கத் திணைக்களம் உடனடியாகப் பதிலளித்திருக்கவில்லை.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago