Editorial / 2019 மார்ச் 04 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்டு தோறும் இடம்பெறும் முக்கியமான, பாரியளவிலான இராணுவ ஒத்திகைகளை நிறுத்துவதாக, ஐக்கிய அமெரிக்காவும் தென்கொரியாவும் நேற்று (03) அறிவித்துள்ளன.
தனது அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுமாறு வடகொரியாவைக் கோரும் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஆதரவளிக்கும் முகமாகவே, இராணுவ ஒத்திகைகளை நிறுத்துவதாக ஐக்கிய அமெரிக்காவும் தென்கொரியாவும் அறிவித்துள்ளன.
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் இரண்டாவது தடவையாக, வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்துப் பேசிய சில நாட்களிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்கொரியாவிலுள்ள 30,000 வரையிலான ஐக்கிய அமெரிக்கப் படைகளும், ஆயிரக்கணக்கான தென்கொரிய படைவீரர்களுடனான அவற்றின் வருடாந்த இராணுவ ஒத்திகைகளும் கடந்த காலத்தில் வடகொரியாவுக்கு ஆத்திரமூட்டுவதாய் அமைந்திருந்தன.
இந்நிலையில், தென்கொரியாவிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதை மறுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப், இராணுவ ஒத்திகைகளின் செலவு பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருந்ததுடன், ஹனோயில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில், அவற்றை மிக மிகச் செலவானவை என வர்ணித்திருந்தார்.
அந்தவகையில், பென்டகனால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின்படி, தென்கொரிய பாதுகாப்பமைச்சர் ஜியோங் கியோங்-டூவுக்கும் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பற்றிக் ஷனகனுக்குமிடையிலான கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதொரு அலைபேசி அழைப்பில், இராணுவ ஒத்திகைகளை முடிவுக்கு கொண்டு வர இரண்டு தரப்புகளும் தீர்மானித்துள்ளன. குறித்த இராணுவ ஒத்திகைகள், இம்மாதத்தில் ஆரம்பமாகி 10 நாட்களுக்கு இடம்பெறுவது வழமையாகும்.
இந்நிலையில், அணு ஆயுதங்களுடன் வடகொரியாவுக்கு எந்தவொரு பொருளாதார எதிர்காலமும் இல்லையென ஜனாதிபதி ட்ரம்ப், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago