Editorial / 2019 மே 15 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தடைகளை மீறியதற்காக, ஐக்கிய அமெரிக்காவால் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலொன்றை விடுவிக்குமாறு வடகொரியா, நேற்று (14) வலியுறுத்தியுள்ளதுடன், கப்பல் கைப்பற்றப்பட்டதை சட்டரீதியற்ற கொள்ளை எனத் தெரிவித்துள்ளது.
தடைகளை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காரணங்காட்டி, இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டு ஓராண்டுக்குப் பின்னர், வடகொரியாவின் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலான எம்/வி வைஸ் ஹொனெஸ்டைத் தாம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
அந்தவகையில், வடகொரிய சரக்குக் கப்பலொன்று, தடைகளை மீறியதற்காக ஐக்கிய அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக குறித்த கைப்பற்றல் அமைந்திருந்தது.
இந்நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடந்தாண்டு ஜூனில் சிங்கப்பூரில் இடம்பெற்ற சந்திப்பின்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என கப்பல் கைப்பற்றலை வடகொரியாவின் வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவர் விமர்சித்துள்ளார்.
தனது அணு, ஏவுகணைத் திட்டங்களுக்காக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பல தடைகளை வடகொரியா எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறுந்தூர ஏவுகணைகளை கடந்த வாரம் வடகொரியா சோதித்ததைத் தொடர்ந்தே குறித்த கப்பல் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago