Editorial / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் போலிப் பல்கலைக்கழகமொன்றில் இணைந்தார்கள் என்ற குற்றச்சாட்டில், இந்தியாவைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான தனது எதிர்ப்பை, இந்திய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் அண்மைக்காலத்தில் நெருக்கமடைந்தன எனக் கருதப்படும் நிலையிலேயே, இவ்வெதிர்ப்பை, நேற்று முன்தினம் (02), இந்தியா வெளிப்படுத்தியது.
டீட்ரொய்டில் உள்ள போலியான தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்து, மாணவர் விசா வசதியைப் பயன்படுத்தி, அவர்கள் தொடர்ந்தும் ஐ.அமெரிக்காவில் தங்கியிருக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில், 8 பேரைக் கைதுசெய்ததாக, ஐ.அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் அறிவித்திருந்தனர். குறித்த போலிப் பல்கலைக்கழகம், ஐ.அமெரிக்க குடிவரவு அதிகாரிகளாலேயே நடத்தப்பட்டு வந்துள்ளது.
இவர்களுக்கு மேலதிகமாக மாணவர்களும் தடுத்துவை க்கப்பட்டனர். ஆனால், எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிக்கினர் என்பதை, ஐ.அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தி யிருக்கவில்லை. இந்திய ஊடகங்களின் கருத்தின்படி, 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
இதற்குள், புதுடெல்லியிலுள்ள ஐ.அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவுறுத்தலொ ன்றை விடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சு, தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான இராஜதந்திர அணுக்கத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனக் கோரியுள்ளது. அத்தோடு, போலி முகவர்களையும் மாணவர்களையும் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது எனவும், மாணவர்கள் ஏமாற்றப்பட்டி ருக்கலாம் எனவும், வெளிவிவகார அமைச்சுத் தெரிவி த்துள்ளது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago