Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவில் புதிய ஏவுகணைகளை தரையிறக்குவதற்கெதிராக, ஐக்கிய அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தமது ஆயுதத் தளவாடங்களால், மேற்குலக தலைநகரங்களை இலக்கு வைத்து பதிலடி வழங்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கையொன்றை ஜனாதிபதி புட்டின் விடுத்தபோதும், ஐக்கிய அமெரிக்காவுடன் நட்புறவையே விரும்புவதாகவும் ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேசத்துக்கான உரையொன்றை நேற்று நிகழ்த்தியிருந்த ஜனாதிபதி புட்டின், புதிய ஏவுகணைகளைத் தயாரிக்கும் பொருட்டே, 1987 மத்தியதூர அணு சக்திகள் ஒப்பந்தத்தைக் கைவிட்டதாகவும் இதற்காக ரஷ்யாவைச் சாட முயல்வதாகவும் கூறினார்.
1987ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனுக்கும் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மிகைல் கொர்பசெவ்வுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட மத்தியதூர அணுசக்திகள் ஒப்பந்தமானது, சோவியத் ஒன்றியத்தின் அணுவாயுத முனையைக் கொண்ட ஏவுகணைகள், மேற்குலக தலைநகரங்களை இலக்கு வைக்கும் நெருக்கடியைத் தீர்த்திருந்தது.
மத்தியதூர அணுசக்திகள் ஒப்பந்தமானது 500 கிலோ மீற்றருக்கும் 5,500 கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட வீச்சத்தைக் கொண்ட ஏவுகணைகளை தயாரிப்பதை, சோதிப்பதை, தரையிறக்குவதை தடை செய்திருந்தது. ஏனெனில், மத்தியதூர ஆயுதங்கள், தமது இலக்குகளை அடைவதற்கு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை விட குறைவான நேரத்தையே எடுக்கின்ற நிலையில் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், புதிய அணு ஆயுதங்களை செலுத்தும் அமைப்புகளை ஐக்கிய அமெரிக்கா தயாரிக்கவில்லையெனத் தெரிவிக்கும் அந்நாட்டின் இராஜாங்கத் திணைக்களம், மத்தியதூர அணு சக்திகள் ஒப்பந்தத்தை ஐக்கிய அமெரிக்கா மீறாதபோது ரஷ்யா மீறியதாகக் கூறியுள்ளது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago