Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-ஆயுதக்குழுவின் இறுதியிடத்தை குர்திஷ் தலைமையிலான படைகள் சுற்றிவளைத்துள்ள நிலையில், அங்குள்ள குடும்பங்கள் நேற்று வெளியேறியுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இறுதியிடமான ஃபக்கூஸின் மேலால் சாம்பல் நிறப்புகை மேலெழுந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் நேற்று முன்தினம் இரவு வெளியேறியிருந்த நிலையில், மேலும் நூற்றுக்கணக்கானோர், நேற்றுக் காலையில் வெளியேறியிருந்தனர்.
போர்க்களத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு 600 பொதுமக்கள் வெளியேறியனர் என சிரிய ஜனநாயகப் படைகளின் பேச்சாளர் முஸ்தபா பாலி தெரிவித்த நிலையில், மேலும் 350 பேர் நேற்றுப் பகலில் வெளியேறினரென மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், புதிதாக வெளியேறியோரில் ஆறு பேர், வயது வந்தோரெனவும், ஏனையோர் சிறுவர்களும் பெண்களுமெனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர்களில் அரைவாசிப்பேர், உக்ரேனியர்கள் அல்லது ரஷ்யர்கள் என்பதோடு, ஏனையோரில் பெரும்பாலோனோர் சிரியர்கள் எனக் கூறப்படுகிறது.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago